Advertisement

ENG v IRE, Only Test: போப், பிராட், டங் அசத்தல்; அயர்லாந்தை பந்தாடியது இங்கிலாந்து!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

Advertisement
ENG vs IRE, Only Test: Impressive England ease to a win over Ireland at Lord's!
ENG vs IRE, Only Test: Impressive England ease to a win over Ireland at Lord's! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 03, 2023 • 10:14 PM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி  ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஜூன் 1ஆம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி அயர்லாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்தில் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 172 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 03, 2023 • 10:14 PM

இதையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் க்ராவ்லி மற்றும் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் க்ராவ்லி 56 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து டக்கட்டுடன் ஓலி போப் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அயர்லாந்தின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். இருவரது விக்கெட்டுளையும் எடுக்க முடியாமல் அயர்லாந்து அணியினர் சிரமப்பட்டனர்.

Trending

இதில் டக்கட் இரட்டை சதத்தை நெருங்கிய வேளையில் 182 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய ஒல்லி போப் இரட்டை சதம் அடித்தார். அவர் 205 ரன்னும், ரூட் 56 ரன்னும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். இதையடுத்து இங்கிலாந்து அணி 82.4 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 524 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து 352 ரன்கள் முன்னிலை பெற்றது. 

இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பீட்டர் மூர், ஜேம்ஸ் மெக்கலம் ஆகியோர் இந்த இன்னிங்ஸிலும் பெரிதாக சோபிக்கமுடியாமல் விக்கட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஆண்டரூ பால்பிர்னி 2 ரன்களுக்கும், நட்சத்திர வீரர் பால் ஸ்டிர்லிங் 15 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. 

இதையடுத்து 255 ரன்கள் பின் தங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அயர்லாந்து அணிய்ல் ஹாரி டெக்டர் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களிலும், லோர்கன் டக்கர் 44 ரன்களிலும் என ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கர்டிஸ் காம்பேரும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த  ஆண்டி மெக்பிரைன் - மார்க் அதிர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் இருவரும் அரைசதம் கடந்த நிலையி ஆண்டி மெக்பிரைன் 86 ரன்களுக்கும், மார்க் அதிர் 88 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க அயர்லாந்து அணியும் இரண்டாவது இன்னிங்ஸில 362 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீசிய அறிமுக வீரர் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் இரட்டை சதமடித்து அசத்திய ஒல்லி போப் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.  

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement