Advertisement
Advertisement
Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெ
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெ (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 20, 2024 • 10:54 PM

England vs South Africa Dream11 Prediction, T20 World Cup 2024: 9ஆவது சீசன் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த 8 அணிகளில் இருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் நாளை நடைபெறும் போட்டியில் குரூப் 2-இல் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 20, 2024 • 10:54 PM

ENG vs SA: போட்டி தகவல்கள்

Trending

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானம், செயின்ட் லூசியா
  • நேரம் - ஜூன் 21, இரவு 8 மணி

ENG vs SA Pitch Report

செயின்ட் லூசியாவில் உள்ள மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் இங்கு பேட்டர்கள் தங்களது ஷாட்களை விளையாட முடியும். அதேசமயம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களும் நல்ல வேகம் மற்றும் ஸ்விங் ஆகிவை கிடைக்கும் என்பதால், புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் சுழற்பந்து வீச்சாளர்களும் இங்கு தங்கள் திறனை வெளிப்படுத்தலாம்.

ENG vs SA T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 25
  • இங்கிலாந்து - 12
  • தென் ஆப்பிரிக்கா - 12
  • முடிவில்லை - 01

ENG vs SA: Where to Watch?

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

England vs South Africa Probable Playing XI

இங்கிலாந்து உத்தேச லெவன்: பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குரான், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், அடில் ரஷித், ரீஸ் டாப்லி.

தென் ஆப்பிரிக்கா உத்தேச லெவன்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

ENG vs SA T20 World Cup Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், பில் சால்ட், குயின்டன் டி காக் (துணை கேப்டன்)
  • பேட்ஸ்மேன் - ஜானி பேர்ஸ்டோவ்
  • ஆல்ரவுண்டர் - ஐடன் மார்க்ரம், மொயின் அலி
  • பந்துவீச்சாளர்கள் - ககிசோ ரபாடா, ஜோஃப்ரா ஆர்ச்சர், அன்ரிச் நோர்ட்ஜே, கேசவ் மகாராஜ்.

ENG vs SA Dream11 Prediction, T20 World Cup 2024, Today Match ENG vs SA, ENG vs SA Dream11 Team, Fantasy  Cricket Tips, ENG vs SA Pitch Report, Today  Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs South Africa

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement