
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
England vs Scotland Dream11 Prediction, T20 World Cup 2024: ஐசிசி நடத்தும் 9ஆவது ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஸ்காட்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவாகும். இரு அணிகளிலும் கவனிக்கத்தக்க வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
ENG vs SCO: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து
- இடம் - கெனிங்ஸ்டன் ஓவல், பார்படாஸ்
- நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)
ENG vs SCO : பிட்ச் ரிப்போர்ட்