
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியானது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் கஸ் அட்கின்சன், ஜேமி ஸ்மித்தும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் மைக்கெல் லூயிஸ் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் கிரேக் பிராத்வைட் - மைக்கேல் லூயிஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் கேப்ட பிராத்வைட் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிர்க் மெக்கன்ஸியும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார்.
அதன்பின் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய அறிமுக வீரர் மைக்கேல் லூயிஸ் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 23 ரன்களில் அலிக் அதானாஸும், அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர், ஜோஷுவா டா சில்வா ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றியும் என அட்கின்சன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.