
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கார்டிஃபில் உள்ள சோஃபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முன்னதாக நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இதனால் இன்றைய போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸும் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்யும் முயற்சியில் விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் கடைசி மூன்று ஓவர்களில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதை அடுத்து, எஞ்சிய ஓவர்களின் போது 5 ஃபீல்டர்களை 3யார்ட் வைட்டத்திற்குள் வைத்து பந்துவீச்ச வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தது.