ENGW vs INDW, 3rd ODI: ஆறுதல் வெற்றியையாவது பொறுமா இந்தியா?
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 3) வர்செஸ்டரில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய மகளிர் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (ஜூலை 3) வர்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
Trending
ஏற்கெனவே ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்திய மகளிர் அணி, இப்போட்டியில் ஆறுதல் வெற்றியையாவது பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்திய அணி
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவும், தீப்தி சர்மா, பூனம் ராவத் ஆகியோருடன் அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மாவும் பேட்டிங்கில் வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் முந்தைய போட்டியில் மிதாலி ராஜ், ஷஃபாலி ஆகியோரைத் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
பந்துவீச்சிலும் ஜூலன் கோஸ்வாமி, ஷிக்கா பாண்டே, பூஜா வட்ஸ்ரேக்கர் ஆகியோர் தங்களது திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணி நாளைய போட்டியில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி
ஹீத்தர் நைட் தலைமையிலான உலக சாம்பியனான இங்கிலாந்து மகளிர் அணி உலகின் மிகவும் வலுவான கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழ்கிறது.
அதிலும் டாமி பீயூமன்ட், நாட் ஸ்கைவர், எமிலி ஜோன்ஸ், அன்யா ஸ்ருப்சோல், சோபி எக்லெஸ்டோன், கேத்தரின் பிரண்ட் என திறமையான வீராங்கனைகள் நிறைய பேர் அந்த அணியில் உள்ளனர். அதிலும் கடந்த போட்டியில் கேட் கிராஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதனால் நாளைய போட்டியிலும் அவர்கள் தங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்தி இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 71 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 30 போட்டிகளில் இந்தியாவும், 39 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் முடிவின்றி அமைந்துள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உத்தேச அணிகள்
இந்திய அணி - ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, புனம் ரவுத், மிதாலி ராஜ் (கே), ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா, ஷிகா பாண்டே, ஜூலன் கோஸ்வாமி, தானியா பாட்டியா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்திரகர், ஈக்டா பிஸ்ட்.
இங்கிலாந்து அணி- லாரன் வின்ஃபீல்ட் ஹில், டாமி பியூமண்ட், ஹீத்தர் நைட் (கே), நடாலி ஸ்கைவர், ஆமி எலன் ஜோன்ஸ், சோபியா டாங்க்லி, சாரா கிளென், கேத்ரின் பிரண்ட், அன்யா ஷ்ரூப்சோல், சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்.
Win Big, Make Your Cricket Tales Now