
England announce blockbuster home season for 2022 (Image Source: Google)
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையைவெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கின்றன.
நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தென்ஆப்பிரிக்கா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்டு, ஒருநாள், டி20 போட்டியிலும், இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 போட்டிகளிலும் விளையாடுகின்றன.
இதில் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 27ஆம் தேதி முடிவடைகிறது. தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான தொடர் ஜூலை 19 முதல் செப்டம்பர் 12வரை நடைபெறுகிறது.