
England Announce Squad For First Two Tests Against New Zealand; Anderson-Broad Return (Image Source: Google)
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ஜூன் 2 முதல் 27 வரை இந்த டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன.
இந்த டெஸ்ட் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததன் விளைவாக, ரூட் கேப்டன்சியிலிருந்து விலக, பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கேப்டனாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஸ்டோக்ஸ் தலைமையிலான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.