
England Announces 17-Member Squad For Test Series Against India (Image Source: Google)
விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணி கவுண்டி லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இத்தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான ஜோ ரூட் தலைமையிலான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.