
England batter Jason Roy takes break from cricket, to be unavailable for Surrey (Image Source: Google)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஜேசன் ராயை ரூ.2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியிருந்தது. இந்த நிலையில் 31 வயதான ஜேசன் ராய் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்.-ல் இருந்து திடீரென விலகியுள்ளார்.
தொடர் பயோ பபுள் சூழலில் நீண்ட நாட்கள் இருப்பது சோர்வை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக அவர் குஜராத் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதே காரணங்களுக்காக அவர் கவுண்டி கிரிக்கெட் தொடரிலிருந்தும் விலகியுள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடி வரும் ஜேசன் ராய் நடப்பாண்டு லீக் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.