-mdl.jpg)
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி மெல்பர்னில் நடந்துவருகிறது. பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை தொடக்கம் முதலே கட்டுப்பாட்டில் வைத்தனர் இங்கிலாந்து பவுலர்கள். தொடக்க வீரர் முகமது ரிஸ்வானை 15 ரன்களுக்கு சாம் கரன் வீழ்த்தினார். கடந்த சில போட்டிகளாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த முகமது ஹாரிஸை வெறும் 8 ரன்னுக்கு வெளியேற்றிய அடில் ரஷீத், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை 32 ரன்களுக்கு வீழ்த்தினார்.
இஃப்டிகார் அகமது ரன் அடிக்காமல் டக் அவுட்டானார். ஷான் மசூத் மட்டும் நிலைத்து நின்று பொறுப்புடன் பேட்டிங் ஆடி நம்பிக்கையளித்தார். 28 பந்தில் 38 ரன்கள் அடித்த ஷான் மசூத்தை அதன்பின்னர் நீடிக்கவிடாமல் சாம் கரன் அவுட்டாக்கி அனுப்பினார். ஷதாப் கான் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களை சாம் கரனும் கிறிஸ் ஜோர்டானும் இணைந்து அருமையாக வீசி, 4 ஓவரில் 20 ரன்களுக்கும் குறைவாக கொடுத்து 4 விக்கெட்டுகளையும் வீழ்த்த, பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது.