இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணியில் அலிஸ் கேப்ஸி, லாரன் ஃபிலர் சேர்ப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணியில் கூடுதலாக அலிஸ் கேப்ஸி, லாரன் ஃபிலர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இங்கிலாந்து மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது மே 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி டி20 தொடரை வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முயற்சியில் உள்ளது. அதேசமயம் டி20 தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரில் அதற்கான பதிலடியைக் கொடுக்க காத்திருக்கிறது.
இதன் காரணமாக இத்தொடரை எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீராங்கனையுமான ஹீதர் நைட் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரின் போது ஹீதர் நைட் காயத்தை சந்தித்ததாகவும், அதற்கான சிகிச்சையை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இங்கிலாந்து ஒருநாள் அணியில் பேட்டர் அலிஸ் கேப்ஸியும், வேகப்பந்து வீச்சாளர் லாரன் ஃபிலரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஹீதர் நைட் காயத்தில் இருந்து மீளாத நிலையில் அவரது இடத்தில அலிஸ் கேப்ஸி சேர்க்கப்படுவார் என்றும், மறுபக்கம் காயத்திலிருந்து மீண்டுள்ள லாரன் ஃபிலர் இங்கிலாந்து ஒருநாள் அணியில் மீண்டும் சேர்க்கப்படுவதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணி: நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கே), எமிலி ஆர்லாட், டாமி பியூமண்ட், லாரன் பெல், ஆலிஸ் கேப்ஸி, கேட் கிராஸ், ஆலிஸ் டேவிட்சன்-ரிச்சர்ட்ஸ், சார்லி டீன், சோபியா டங்க்லி, லாரன் ஃபிலர், மஹிகா கவுர், சாரா க்ளென், ஆமி ஜோன்ஸ், ஹீதர் நைட், எம்மா லாம்ப், லின்சி ஸ்மித்.
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி: ஹீலி மேத்யூஸ் (கே), ஷெமைன் காம்பெல் (துணைக்கேப்டன்), ஆலியா அலீன், ஜஹ்ஸாரா கிளாக்ஸ்டன், அஃபி பிளெட்சர், செர்ரி ஆன் ஃப்ரேசர், ஷபிகா கஜ்னபி, ஜன்னில்லியா கிளாஸ்கோ, ரியலினா கிரிம்மண்ட், ஸைதா ஜேம்ஸ், கியானா ஜோசப், மாண்டி மங்ரு, அஷ்மினி முனிசர், கரிஷ்மா ராம்ஹராக், ஸ்டெஃபானி டெய்லர்.
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் ஒருநாள் தொடர்
- முதல் ஒருநாள் போட்டி - மே 30 - டெர்பி
- 2வது ஒருநாள் போட்டி - ஜூன் 4 - லெய்செஸ்டர்
- 3வது ஒருநாள் போட்டி - ஜூன் 7 - டவுண்டன்
Win Big, Make Your Cricket Tales Now