Advertisement

இலங்கை தொடரில் இருந்து விலகினார் மார்க் வுட்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி வீரர் மார்க் வுட் காயம் காரணமாக இத்தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

Advertisement
இலங்கை தொடரில் இருந்து விலகினார் மார்க் வுட்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
இலங்கை தொடரில் இருந்து விலகினார் மார்க் வுட்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 25, 2024 • 04:03 PM

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் சதமடித்து அசத்த அந்த அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 25, 2024 • 04:03 PM

பின்னர் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணியில் கமிந்து மென்டிஸ் சதம் விளாசினார். அவருக்கு துணையாக தினேஷ் சண்டிமால் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அரை சதம் கடக்க, அந்த அணி 326 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. மேலும் இங்கிலாந்து அணிக்கு 205 ரன்களையும் இலக்காக நிர்ணயித்தது. 

Trending

பின்னர் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 57.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றுள்ளது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் கைப்பற்றினார்.

இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசிய இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக தனது ஓவரை முடிப்பதற்கு முன்னரே பெவிலியன் திரும்பினார். அதன்பின் அந்த ஓவரில் மீதமிருந்த பந்துகளை ஜோ ரூட் வீசினார். இந்நிலையில் மார்க் வுட்டின் காயம் தீவிரமடைந்திருப்பதன் காரணமாக, இலங்கை அணிக்கு எதிரான எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

மேற்கொண்டு தொடரில் இருந்து விலகிய மார்க் வுட்டிற்கு பதிலாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல்லிற்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து லையன்ஸ் அணியாக விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளது. 

ஏற்கெனவே இங்கிலாந்து அணியானது அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், தொடக்க வீரர் ஸாக் கிரௌலி ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய நிலையில், தற்போது மார்க் வுட்டும் தொடரில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இங்கிலாந்து அணி: ஒல்லி போப் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், டான் லாரன்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement