
இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு (2022) முழுவதுமே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்ட பிறகு அந்த அணியின் பேட்டிங்கில் பல மாற்றங்கள் வந்துள்ளன. இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்யும் விதம் அதிரடியாக மாறியுள்ளது. முன்பு இருந்த இங்கிலாந்து அணியா இது? என்ற கேள்வி உருவாகும் அளவுக்கு அவர்களது பேட்டிங்கில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்யும் விதத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் பெரிய ஷாட்களை அதிரடியாக விளையாடுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் ரன்களைக் குவித்து அணிக்கு வெற்றியை பெற்றுத் தரும் நபராக அவர் மாறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற 10 டெஸ்ட் போட்டிகளில் 9 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியதும் இதில் அடங்கும். அணியின் கேப்டனாக அணியை வழிநடத்துவதில் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.