மீண்டும் காயத்தை சந்தித்த ஸ்டோக்ஸ்; மூன்று மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்துள்ளதால், அவர் காயத்தில் இருந்து குணமடையை குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி சமீபத்தில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்பின் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வரியம் அறிவித்தது.
Trending
இதில் பெரிதும் எதிர்பார்ப்பட்ட நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவேன் என பென் ஸ்டோக்ஸ் உறுதியளித்திருந்த நிலையில், இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவரது பெயர் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை வழங்கியது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்யாததற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீசும் போது காயமடைந்த பென் ஸ்டோக்ஸ், களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் சோதனையின் முடிவில் ஸ்டோக்ஸின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், அவர் காயத்தில் இருந்து குணமடையை குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் தனது எக்ஸ் பதிவில், “இன்னும் எதேனும் அதிகமாக செய்ய வேண்டும்… பிறகு முன்னேறுங்கள் !!!!!!!! நான் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. எனது அணிக்காகவும் இந்த சட்டைக்காகவும் நிறைய இரத்த வியர்வை மற்றும் கண்ணீரானது கொடுக்க வேண்டும். அதனால்தான் ஃபீனிக்ஸ் பறவையின் படத்தை என் உடலில் பச்சை குத்தியுள்ளேன். உங்களை களத்தில் சந்திக்கிறேன்” என்று பதிவுசெய்துள்ளார்.
Something else to overcome…go on then!!!!!!!!
— Ben Stokes (@benstokes38) December 23, 2024
I’ve got so much more left in this tank and so much more blood sweat and tears to go through for my team and this shirt.
There’s a reason I have a Phoenix permanently inked on my body
See you on the field to fuck some shit up
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது இடது காலில் ஏற்பட்ட தொடை காயம் காரணமாக இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் விளையாடவில்லை. அதன்பின் கம்பேக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ் தற்போது மீண்டும் காயத்தை சந்தித்துள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகவே அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியிலும் இடம்பிடிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ரஷித், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்.
Win Big, Make Your Cricket Tales Now