ஐசிசி மாதாந்திர விருதுகள் - ஆடவர் பிரிவில் ஜோஸ் பட்லர்; மகளிர் பிரிவில் சித்ரா அமீன் தேர்வு!
நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் வென்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கி வருகிறது.
இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் பந்துவீச்சாலர் ஷாஹின் ஷா அஃப்ரிடி, இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர், ஆதில் ரஷீத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தனர்.
Trending
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் 73 ரன்களும் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக 49 பந்துகளில் 80 ரன்களும் எடுத்து இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார் பட்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மகளிருக்கான சிறந்த வீராங்கனை பட்டியளில் அயர்லாந்தின் கேபி லூயிஸ்,தாய்லாந்து அணியின் நத்தகன் சந்தம், பாகிஸ்தானின் சித்ரா அமீன் ஆகீயோரது பெயர்கள் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர்கனை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தானின் சித்ரா அமீன் சிறந்த வீராங்கனைக்கான விருதினைப் பெற்றார்.
Win Big, Make Your Cricket Tales Now