
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று டவுன்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து வந்த நிலையில், மழை காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் மழையின் காரணமாக இப்போட்டியானது 21 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைப்பட்டு மீண்டும் தொடங்கியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் கியானா ஜோசப் 34 ரன்களையும், ஆலியா அலீன் 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக 21 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 016 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
இங்கிலாந்து மகளிர் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாரா க்ளென் 3 விக்கெட்டுகளையும், எமிலி அர்லோட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியில் இந்த ஆட்டத்தில் சோஃபியா டங்க்லி மற்றும் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 40 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் டங்க்லி 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.