
Cricket Image for IND vs ENG: பந்து வீச அதிக நேரம் எடுத்துகொண்ட இங்கிலாந்து; அபராதம் விதித்தது ஐசிசி (England Cricket Team (Image Source: Google))
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்த விளையாடியது. இப்போட்டியில் முதலில் பந்துவீசிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக போட்டி நடுவர்கள் குற்றஞ்சாட்டினர். இது ஐசிசியின் ஒழுங்கு நடத்தை விதி 2.22 படி குற்றமாகும்.
இதையடுத்து பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவித ஊதியத்தை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.