
England has completed a decade-long wait on Openers Partnership against India (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் மிக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி, 78 ரன்களில் ஆல் அவுட்டாகினர். இந்திய அணி சார்பாக ரோஹித் அதிகபட்சமாக 19 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை 42 ஓவர்களை சந்தித்து 120 ரன்களை குவித்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் யாதெனில் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவு வரை அவர்கள் ஒரு விக்கெட்டை கூட இழக்கவில்லை.