
England have announced a bumper home schedule for 2023 (Image Source: Google)
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2023 ஆம் ஆண்டு கோடை காலத்தில் விளையாட உள்ள கிரிக்கெட் போட்டிகள் அட்டவணையை தற்போது வெளியிட்டு உள்ளது. இதில் பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடர்பான அட்டவணையும் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்பு அயர்லாந்த அணி ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி விளையாடுகிறது. இதனை தொடர்ந்து ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து ஆஷஸ் டெஸ்ட் தொடரை இழந்தது. இதனை அடுத்து மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றும் உத்வேகத்துடன் இங்கிலாந்து உள்ளது.