Advertisement

IND vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடமில்லை!

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
IND vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடமில்லை!
IND vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடமில்லை! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 24, 2024 • 02:19 PM

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நாளை (ஜன.25) ஹைதராபாத்திலுள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக இத்தொடர் இருப்பதால இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 24, 2024 • 02:19 PM

இந்நிலையில் இந்திய அணிக்கெதிரான முதல் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் ஆச்சரியப்படும் வகையில் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல் விசா பிரச்சனையால் நாடு திரும்பிய சோயப் பஷீரும் முதல் போட்டியில் விளையாடவில்லை.

Trending

இருப்பினும் அறிமுக வீரரான டாம் ஹார்ட்லிக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. மேலும் ஒல்லி போப், பென் ஃபோக்ஸ், ரெஹான் அஹ்மத் மற்றும் ஜேக் லீச் ஆகியோர் மீண்டும் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். இவர்களைத் தவிர்த்து நட்சத்திர வீரர்கள் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், மார்க் வுட் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். 

 

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ், ரெஹான் அஹ்மத், டாம் ஹார்ட்லி, மார்க் வூட், ஜாக் லீச்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement