IND vs ENG, 4th Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ராபின்சன், பஷீருக்கு வாய்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வென்றால் மட்டுமே டெஸ்ட் தொடரில் நீடிக்கும் என்பதால் அவர்களும் கடும் சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் ராஞ்சி சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Trending
அதன்பன் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மற்றும் சுழற்பந்து வீச்சாள ரெஹான் அஹ்மத் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஒல்லி ராபின்சன் மற்றும் இளம் வீரர் சோயப் பஷீர் ஆகியோருக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக சோயப் பஷீர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது மீண்டும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
England's XI For The Fourth Test!#INDvENG pic.twitter.com/6G0FLrtX0s
— CRICKETNMORE (@cricketnmore) February 22, 2024
மறுபக்கம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த ஒல்லி ராபின்சன் முதல் மூன்று போட்டிகளுக்கான அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் நான்காவது போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனின் இடம்பிடித்துள்ளார். இவர்களைத் தவிர்த்து ஒல்லி போப், ஜானி பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட் ஆகியோரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஷோயப் பஷீர்.
Win Big, Make Your Cricket Tales Now