
England Leave Out Broad-Anderson From Test Squad For West Indies Tour (Image Source: Google)
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணியானது கடந்த சில மாதங்களாகவே படுதோல்வியைச் சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கில் அந்த அணி இழந்தது.
இதனால் அணியின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட் அதிரடியாக நீக்கப்பட்டு, தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் பால் காலிங்வுட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மார்ச் மாதம் தொடங்கும் இத்தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.