Advertisement
Advertisement
Advertisement

இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்; கேப்டனாக ஒல்லி போப் நியமனம்!

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

Advertisement
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்; கேப்டனாக ஒல்லி போப் நியமனம்!
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்; கேப்டனாக ஒல்லி போப் நியமனம்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 13, 2024 • 11:20 PM

இலங்கை அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியும் இங்கிலாந்து சென்றடைந்ததுடன், தங்கள் பயிற்சியை தொடங்கியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 13, 2024 • 11:20 PM

மேலும் இத்தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார்.

Trending

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடிய நிலையில், மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்து போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமானதை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

 

இதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஒல்லி போப் இத்தொடரில் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஸாக் கிரௌலி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்சமயம் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஒல்லி போப் (கேப்டன்), கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், டேனியல் லாரன்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement