-lg1-mdl.jpg)
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் நடைபெற இருந்த மூன்றாவது டி20 போட்டியும் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று லண்டனில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்த பாகிஸ்தன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் ஆசாம் 36 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது ரிஸ்வானும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய உஸ்மான் கான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.