
England pacer Tymal Mills ruled out of T20 WC due to thigh strain (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், மற்ற இரு அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் காயம் காரணமாக இத்தொடரின் பாதியிலேயே விலகியுள்ளார்.
ஷார்ஜாவில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான போட்டியின் போது டைமல் மில்ஸ் காயமடைந்தார். அதன்பின் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் அவரது காயம் தீவிரமடைந்திருப்பது தெரியவந்தது.