
இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றியைப் பெற்றுள்ளது.
இப்போட்டியின் கடைசி இன்னிங்ஸில் 297 ரன்கள் இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 94/4 எனத் திணறிக் கொண்டிருந்தபோது ஜானி பேர்ஸ்டோவ் 92 பந்துகளில் 136 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 70 பந்துகளில் 75 ரன்களும் குவித்து, அணிக்கு 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர்.
இருப்பினும், இங்கிலாந்து அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக, குறிப்பாக இரண்டு ஓவர்களை அதிகமாக எடுத்துக் கொண்டதாக கூற ஐசிசி, இங்கிலாந்து அணியின் இரண்டு புள்ளிகளை குறைத்துள்ளது. விதிமுறைப்படி ஒரு ஓவர் தாமதமாக பந்துவீச்சில் ஒரு புள்ளி குறைக்கப்படும். மேலும் இங்கிலாந்து வீரர்களின் 40 சதவீத போட்டியை அபராதமாகப் பெறப்பட்டுள்ளது.