இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் ஜேக் லீச்!
காயம் காரணமாக இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் விலகியுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலையைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், இந்திய அணிக்கெதிரான முதல் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேக் லீக் காயமடைந்தார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது காயமடைந்த இவர், காயத்துடனே இரண்டாவது இன்னிங்ஸிலும் பந்துவீசிய அவர் ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
Trending
இதனால் இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜேக் லீச் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜேக் லீச் விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு மாற்றாக அறிமுக வீரர் சோயப் பஷீர் அணியில் சேர்க்கப்படுவார் என்பது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய பென் ஸ்டோக்ஸ், “இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஜேக் லீச் விலகுகிறார். அவரது காலில் ஏற்பட்ட ரத்தகசிவு இன்னும் முழுமையாக குணமடையாததால் அவரால் இப்போட்டியில் விளையாட முடியாது. அவரது காயம் எங்களுக்கு மிகவும் வெறுப்படைய செய்கிறது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்கானித்து வருகின்றன. மேலும் அவர் இத்தொடரில் பங்கேற்க நாங்கள் போதிய அவகாசம் கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now