
மகளிர் டி20 உலக கோப்பையில் க்ரூப் ஏ-விலிருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. இன்று க்ரூப் ஏ-விலிருந்து மோதும் தென் அப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஜெயித்தால் அரையிறுதிக்கு முன்னேறும். தென்னாப்பிரிக்கா தோற்றால் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும்.
க்ரூப் பி-யிலிருந்து இங்கிலாந்து, இந்தியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்று இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் அந்த க்ரூப்பின் கடைசி லீக் போட்டியில் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனை டன்க்லி (2) மற்றும் கேப்ஸி(6) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 33 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்தது. மற்றொரு தொடக்க வீராங்கனையான டேனியல் வியாட் மற்றும் 4ம் வரிசையில் இறங்கிய நாட் ஸ்கிவர் பிரண்ட் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து, 3வது விக்கெட்டுக்கு74 ரன்களை சேர்த்தனர்.