Advertisement

ENGW vs WIW, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Advertisement
ENGW vs WIW, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
ENGW vs WIW, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 05, 2025 • 08:33 AM

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று லெய்செஸ்டரில் நடைபெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 05, 2025 • 08:33 AM

இப்போட்டியில் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு ஏமி ஜோன்ஸ் மற்றும் டாமி பியூமண்ட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் தொடர்ச்சியாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட எதிரணி பந்துவீச்சாளர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏமி ஜோன்ஸ் இப்போட்டியிலும் சதத்தை விளாச, இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன்பின் 12 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 106 ரன்களை எடுத்த கையோடு ஜோன்ஸ் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். 

அதன்பின் பியூமண்டுடன் இணைந்த எம்மா லாம்பும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இப்போட்டியில் டாமி பியூமண்ட் சத்தைப் பதிவுசெய்ய, மறுபக்கம் எம்மாவும் அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். பின் 20 பவுண்டரிகளுடன் 129 ரன்களை எடுத்திருந்த நிலையில் பியூமண்ட ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிட கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் 12 ரன்னிலும், எம்மா லாம்ப் 55 ரன்னிலும், அதிரடியாக விளையாடிய சோஃபியா டங்க்லி 31 ரன்னிலும், அலிஸ் கேப்ஸி 16 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனு பெவிலியன் திரும்பினர். 

இதன் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் 366 ரன்களை சேர்த்தது. மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கரிஷ்மா ராம்ஹராக் மற்றும் அலியா அலீன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணியானது விளையாடவுள்ளது. ஏற்கெனவே முதல் போட்டியில் தோல்வியை தழுவிவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இன்றைய ஆட்டத்திலும் தோல்வியடைந்தால் தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் ரியலியானா கிரிமண்ட் மற்றும் ஸைதா ஜேம்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸைதா ஜேம்ஸ் 19 ரன்களை மட்டும் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷெமைன் கேம்பல் 6 ரன்களுக்கும், அரைசதம் கடந்து விளையாடி வந்த கிரிமண்ட் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 53 ரன்களுக்கும், ஸ்டாஃபனி டெய்லர் 20 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். மேற்கொண்டு சபிகா கஜ்னாபி, அலியா அலீன் உள்ளிட்டோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

அதன்பின் களமிறங்கிய வீராங்கனைகளில் ஜானிலியா கிளாஸ்கோ 44 ரன்களுக்கும், செர்ரி ஃபிரேசர் 24 ரன்களையும் சேர்த்ததை தவிர மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தரப்பில் அலிஸ் கேப்ஸி 3 விக்கெட்டுகளையும், லாரன் ஃபிலர், லின்ஸி ஸ்மித் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து மளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement