
England To Name Full-Strength Ashes Squad On Today: Report (Image Source: Google)
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒரு முறை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையடி வருகிறது. இந்த தொடரை கைப்பற்றுவது இரு நாடுகளுக்கும் கவுரவ பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் எப்போதுமே இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டின் ஆஷஸ் தொடர் வருகிற டிசம்பர் மாதம் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இங்கிலாந்து அணி தேர்வு குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தது.
இந்த நிலையில் ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த அணியில் 17 முதல் 18 வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.