இங்கிலாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை சௌத்தாம்டனில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற நிலையில், அதில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜூலை 7 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை சௌத்தாம்டனில் நடைபெறவுள்ளது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இதில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இந்தியா
- இடம் - ரோஸ் பவுல் மைதானம், சௌத்தாம்டன்
- நேரம் - இரவு 10.30 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
கரோனா காரணமாக டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய ரோஹித் சர்மா, நாளை நடக்கவுள்ள போட்டியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாகவும் ரோஹித் ஷர்மா செயல்பட உள்ளார்.
இந்த அணியில் மூத்த வீரர்கள் அதிகம் இல்லையென்பதால் தினேஷ் கார்த்திக் களமிறங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. மேலும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் கருதப்படுகிறது.
காரணம் சாம்சன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் பவுன்சர்களை சரியாக கணித்து விளையாடக் கூடியவர். ஆஸி, இங்கிலாந்து மைதானங்களில் இவரால் அதிக ரன்களை குவிக்க முடியும். அதேபோல் உம்ரான் மாலிக் பயிற்சி டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால், அவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் கருதப்படுகிறது.
தீபக் ஹூடாவுக்கும் இது முக்கியமான போட்டியாகும். இவர் தொடர்ந்து ரன்களை குவித்து வரும் அதே நேரத்தில் ஷ்ரேயஸ் ஐயர் பவுன்சருக்கு எதிராக படுமோசமாக திணறி ஆட்டமிழந்து வருகிறார். மேலும் ஹூடாவால் ஓவர்களையும் வீச முடியும். இதனால் ஸ்ரேயஸ் ஐயரை பின்னுக்கு தள்ளி இடம் பிடிக்க வேண்டும் என்றால், ஹூடா தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
அதேபோல் ஈயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியை முதன்முறையாக வழிநடத்துகிறார். மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும் அடுத்தடுத்து 4 சதங்களை விளாசி உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார்.
அவருக்கு துணையாக ஜேசன் ராய், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், மொயீன் அலி என அதிரடி பேட்டிங் பட்டாளம் உள்ளதால் நிச்சயம் ஆட்டத்தில் பரபரப்பு பஞ்சமிருக்காது.
பந்துவீச்சில் தரப்பில் டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டன், டைமல் மில்ஸ் ஆகியோருடன் லியாம் லிவிங்ஸ்டோனும் சமீப காலமாக பந்துவீச்சில் அசத்தி வருவதால் இது இந்திய அணிக்கு தலைவலியாக அமையவும் வாய்ப்பு உள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 19
- இந்தியா வெற்றி - 10
- இங்கிலாந்து வெற்றி -9
உத்தேச அணி
இங்கிலாந்து - ஜோஸ் பட்லர் (கே), ஜேசன் ராய், பிலிப் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், மொயின் அலி, டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, மேத்யூ பார்கின்சன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ்.
இந்தியா - ரோஹித் சர்மா (கே), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்/அர்ஷ்தீப் சிங்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக், பிலிப் சால்ட்
- பேட்டர்ஸ் - ரோஹித் சர்மா, ஜோஸ் பட்லர், சூர்யகுமார் யாதவ்
- ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா
- பந்துவீச்சாளர்கள் - டேவிட் வில்லி, புவனேஷ்வர் குமார், ரீஸ் டிராப்லி
Win Big, Make Your Cricket Tales Now