ENG vs IND, 2nd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நாட்டிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிவடைந்தது.
Trending
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இந்தியா
- நேரம் - பிற்பகல் 3.30 மணி
- இடம் - லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்.
போட்டி முன்னோட்டம்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாளின் போது 9 விக்கெட்டுகளை கையிலிருந்த நிலையில் வெற்றி பெற 157 ரன்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அன்றைய நாள் ஆட்டம் முழுவது மழையால் கைவிடப்பட்டு, இந்திய அணியின் வெற்றி கைநழுவி போனது.
அப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கில் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், விராட் கோலி, ரஹானே, புஜாரா போன்ற சீனியர் வீரர்கள் சொதப்பியது அணிக்கு பெரும் சறுக்கலாக அமைந்துள்ளது.
ஆனால் பந்துவீச்சில் பும்ரா, ஷாமி, சிராஜ், ஷர்துல் என வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலை குழையவைத்திருப்பது இந்திய அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது. இதனால் அடுத்த போட்டியிலும் இவர்களது பந்துவீச்சு இந்திய அணிக்கு கைகுடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏனெனில் முதல் இன்னிங்ஸில் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இந்திய அணி பேட்ஸ்மேன்களை எளிதில் வீழ்த்தியது அந்த அணிக்கு பேரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் ஜோ ரூட்டை தவிர மற்ற வீரர்கள் சரிவர ஃபார்மில் இல்லாதது அந்த அணிக்கு தலைவலியாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் அந்த அணி வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எளிதாக இத்தொடரை வெல்லும் என்றே கருதப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய ஆட்டங்கள் - 127
- இங்கிலாந்து வெற்றி - 48
- இந்திய வெற்றி - 29
- டிராவில் முடிந்தவை - 50
உத்தேச அணி
இங்கிலாந்து - ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, ஜாக் கிரௌலி/ ஹாசீப் ஹமீத், ஜோ ரூட் (கே), ஜானி பேர்ஸ்டோவ், டேனியல் லாரன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஒல்லி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இந்தியா - ரோகித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர்
- பேட்டர்ஸ் - கேஎல் ராகுல், விராட் கோலி, ஜோ ரூட், ரோரி பர்ன்ஸ்
- ஆல் -ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, சாம் கரன்
- பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன்.
Win Big, Make Your Cricket Tales Now