ENG vs IND, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸிலுள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. அதைத்தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸிலுள்ள ஹெடிங்லே மைதானத்தில் நாளை (25-ந் தேதி) தொடங்குகிறது.
Trending
முதல் டெஸ்டில் கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் மழையால் முடிவு பாதிக்கப்பட்து. லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோல்வி நிலைக்கு சென்று அதில் இருந்து மீண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றியை பெற்றது.
இதே போல 3-வது டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
போட்டி முன்னோட்டம்
இந்திய அணி
இந்திய அணியைப் பொறுத்வரை பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் மிகவும் நல்ல ஃபார்மில் உள்ளனர். கடந்த டெஸ்டின் 2ஆவது இன்னிங்சில் ரகானேவும், புஜாராவும் இயல்பான ஆட்டத்துக்கு திரும்பியது அணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
கேப்டன் விராட்கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கில் முத்திரை பதிக்க கூடியவர்கள். லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி நேர ஆட்டக்காரர்களான முகமது ஷமியும், பும்ராவும் பேட்டிங்கில் சாதித்தனர்.
அதேசமயம் பந்துவீச்சாளர்களின் முகமது சிராஜ், பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா என அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இருப்பினும் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ய வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கவுள்ளது.
ஆனால் இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலவீனத்துடன் இருக்கிறது. கேப்டன் ஜோரூட் ஒருவரே பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார். அவர் 2 சதம் உட்பட 386 ரன் எடுத்துள்ளார். அவரை நம்பிதான் அணியே இருக்கிறது. பந்துவீச்சில் ஆண்டர்சன், ராபின்சன் தலா 9 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.
தோல்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீரர் மார்க்வுட் இந்த டெஸ்டில் ஆடவில்லை. இது இங்கிலாந்துக்கு பாதிப்பாகும். இதன் காரணமாக அவரது இடத்தில் சாகிப் மஹ்மூத் இடம் பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பேட்டிங் பலவீனமாக இருப்பதால் டாம் சிப்லிக்கு பதிலாக டேவிட்மலான் இடம் பெற்றுள்ளார். ஜோஸ்பட்லர், பேர்ஸ்டோவ், மொய்ன்அலி ஆகியோர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்
இரு அணிகளும் நாளை மோதுவது 129ஆவது டெஸ்ட் ஆகும். இதுவரை நடந்த 128 போட்டியில் இந்தியா 30 போட்டிகளிலும், இங்கிலாந்து 48 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 50 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.
உத்தேச அணி
இங்கிலாந்து - ஹசீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ், டேவிட் மாலன், ஜோ ரூட்(கே), ஜானி பெயர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கரன், கிரேக் ஓவர்டன்/சாகிப் மஹ்மூத், ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
இந்தியா - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (கே), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா/ ஆர் அஷ்வின், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இங்கிலாந்து vs இந்தியா, 3 வது டெஸ்ட் பேண்டஸி லெவன்:
- விக்கெட் கீப்பர்கள் - ரிஷப் பந்த், ஜோஸ் பட்லர்
- பேட்ஸ்மேன்கள் - கேஎல் ராகுல், விராட் கோலி, ஹசீப் ஹமீத், ஜோ ரூட்
- ஆல் -ரவுண்டர்கள் - சாம் கரன்
- பந்துவீச்சாளர்கள் - முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஒல்லி ஈ ராபின்சன்.
Win Big, Make Your Cricket Tales Now