
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
ENG vs SA, 3rd ODI, Cricket Tips: தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேட முயற்சி செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.