அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு; கேப்டனாக கேட் கிராஸ் நியமனம்!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் கேட் கிராஸ் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசியின் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நேருக்கு நேர் மோதவுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா மற்று பாகிஸ்தானின் மகளிர் அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய தினம் இங்கிலாந்து மகளிர் அணியையௌம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
Trending
ஹீதர் நைட் தலைமையிலான 15 பேர் அடங்கிய இந்த இங்கிலாந்து அணியில், நட்சத்திர தொடக்க வீராங்கனை டாமி பியூமண்ட், வேகப்பந்து வீச்சாளர்கள் கேட் கிராஸ் மற்றும் லாரன் ஃபில்லர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேசமயம் ஹீத நைட், டேனியல் வையட், சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்ஸி, ஏமி ஜோன்ஸ், சோஃபி எக்லெஸ்டோன், மையா பௌச்சர் ம்ற்றும் சார்லீ டீன் உள்ளிட் நட்சத்திர வீராங்கனைகள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக்கொண்டனர்.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து மகளிர் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அந்தவகையில் வரும் செப்டம்பர் 07ஆம் தேதி தொடங்கி, 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இதில் டி20 தொடரானது பெல்ஃபெஸ்டிலும், ஒருநாள் தொடரானது டப்ளினிலும் நடைபெறவுள்ளது. ஆனால் இத்தொடருக்கான ஒருநாள் அணியில் வழக்கமான இங்கிலாந்து வீராங்கனைகளுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக கேட் கிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஹன்னா பேக்கர், ஜியார்ஜியா டேவிஸ், சாரிஸ் பாவ்லி, ரியானா மெக்டொனால்ட், பெய்ஜ் ஸ்காஃபீல்ட், ஜியார்ஜியா ஆடம்ஸ், செரின் ஸ்மேல் உள்ளிட்ட அறிமுக வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் இத்தொடரில் இங்கிலாந்து அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இங்கிலாந்து மகளிர் ஒருநாள் அணி: கேட் கிராஸ் (கே), ஹோலி ஆர்மிடேஜ், ஹன்னா பேக்கர், டாமி பியூமண்ட், ஜார்ஜியா டேவிஸ், லாரன் ஃபைலர், பெஸ் ஹீத், ஃபிரேயா கெம்ப், எம்மா லாம்ப், ரியானா மெக்டொனால்ட், பெய் ஸ்கோல்ஃபீல்ட், பிரையோனி ஸ்மித், மேடி வில்லியர்ஸ், இஸ்ஸி வோங்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து மகளிர் டி20 அணி: கேட் கிராஸ் (கேப்டன்), ஜார்ஜியா ஆடம்ஸ், ஹோலி ஆர்மிடேஜ், ஹன்னா பேக்கர், டாமி பியூமண்ட், மஹிகா கவுர், ரியானா மெக்டொனால்ட்-கே, சாரிஸ் பாவேலி, பைஜ் ஸ்கோல்ஃபீல்ட், செரன் ஸ்மால், பிரயோனி ஸ்மித், மேடி வில்லியர்ஸ், இஸ்ஸி வில்லியர்ஸ்.
Win Big, Make Your Cricket Tales Now