இங்கிலாந்திற்காக மோர்கன் செய்த சாதனைகள்!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள ஈயன் மோர்கன் இங்கிலாந்து அணிக்காக செய்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் ஈயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மோசமான ஃபார்ம் மற்றும் காயங்கள் காரணமாக அவர் ஓய்வு முடிவை அறிவிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், மோர்கன் ஓய்வு பெற்றதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
Trending
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்காக ஈயன் மோர்கன் செய்த சில சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
ஈயன் மோர்கன் படைத்த சாதனைகள்:
- இங்கிலாந்துக்காக அதிக ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர் - 225
- இங்கிலாந்துக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் - 6,957
- இங்கிலாந்துக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் - 202
- இங்கிலாந்துக்காக அதிக சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியவர் - 115
- இங்கிலாந்துக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் - 2,458
- இங்கிலாந்துக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் - 120
2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி படுதோல்வியைச் சந்தித்தது. இதன்பிறகு, அலெஸ்டர் குக்கிடமிருந்த கேப்டன் பொறுப்பு இயான் மார்கனிடம் வழங்கப்பட்டது. அதிரடியும் ஆக்ரோஷமும் என இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் முகத்தையே மாற்றினார் மோர்கன்.
One of the most influential people in English cricket history!
— CRICKETNMORE (@cricketnmore) June 28, 2022
Go Well, @Eoin16 #Cricket #ThankYouMorgan #EnglandCricket #EnglishCricket #Ireland #KKRpic.twitter.com/CzVeqkIOX3
அதன்படி ஐசிசி தரவரிசையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை முதலிடத்துக்கு அழைத்துச் சென்றார். மேலும் 2019இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுத் தந்தார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியால் 498 ரன்கள் விளாச முடிகிறது என்றால், இதற்கு விதை போட்டவர் ஈயன் மோர்கன் தான் என்பதனை யாராலும் மறுக்க முடியாது.
Win Big, Make Your Cricket Tales Now