
England's Joe Root Named ICC Men's Player Of The Month (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரர், வீரங்களுக்கான விருது இன்று அறிவிக்கப்பட்டது.
ஆடவர் பிரிவில் இங்கிலாந்தின் ஜோ ரூ, இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தானின் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் வாக்கெடுப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் இருவரையும் பின்னுக்குத்தள்ளி ஜோ ரூட் விருதைப் பெற்றார். ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்களுடன் 507 ரன்கள் விளாசினார். அத்துடன் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் பிடித்ததன் மூலம் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.