
England's Limited-Overs Tour Of Bangladesh Postponed Until 2023 (Image Source: Google)
வங்கதேசம்-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நடைபெறவிருந்தன.
இந்நிலையில் இந்தத் தொடர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் இணைந்து ஒத்திவைப்பதாக இன்று அறிவித்துள்ளது. இந்தத் தொடர்களை ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்தே முடிவெடுத்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், ஒத்திவைப்புக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.
கரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2021 2ஆம் பகுதி செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இறுதி ஆட்டம் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறுகிறது.