நடத்தை விதிகளை மீறியதாக ரீஸ் டாப்லிக்கு அபராதம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் போது நடத்தை விதிகளை மீறியதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியானது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இதுவரை நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும்ம் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நவம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Trending
இந்நிலையில் இத்தொடரில் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளுக்கான வெஸ் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த அணியில் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் போது விதிகளை மீறியதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது காயம் காரணமாக பெவிலியன் திரும்பிய ரீஸ் டாப்லி, அப்போது டாக்வுட்டில் இருந்த சேர்களை ஆக்ரோஷமாக தூக்கி எறிந்துள்ளார். இது ஐசிசி நடத்தை விதிகளின் படி தவறு என்ப்தால், போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது தவறை ஒப்புக்கொண்டதன் காரணமாக, மேற்கொண்டு விசாரணைக்கு அவர் வர தேவையில்ல என ஐசிசி அறிவித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now