
ENGW vs INDW, 1st T20I: India Women have won the toss and have opted to field (Image Source: Google)
இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, அந்நாட்டு மகளிர் அணிக்கெதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியை டிரா செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நார்த்ஹாம்டனிலுள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.