Advertisement

ENGW vs INDW, 3rd T20I: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!

இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 14, 2021 • 22:41 PM
ENGW vs INDW, 3rd T20I:  India Women have won the toss and have opted to bat
ENGW vs INDW, 3rd T20I: India Women have won the toss and have opted to bat (Image Source: Google)
Advertisement

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, அந்நாட்டு மகளிர் அணிக்கெதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி இன்று செம்ஸ்போர்ட்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Trending


இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. அதன்படி இன்றையப் போட்டிக்கான இரு அணியும் மாற்றங்களின்றி விளையாடுகின்றன.

இங்கிலாந்து அணி- டேனியல் வியாட், டாமி பியூமண்ட், நடாலி ஸ்கைவர், ஹீதர் நைட் (கே), ஆமி எலன் ஜோன்ஸ், சோபியா டங்க்லி, கேத்ரின் பிரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளென், மேடி வில்லியர்ஸ், ஃப்ரேயா டேவிஸ்

இந்திய அணி - ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஹார்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கே), தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், ஸ்நே ராணா, அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், பூனம் யாதவ்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement