
EN-W vs IN-W 4th T20I: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய மகளிர் அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டேனியல் வைட் ஹாட்ஜ் 5 ரன்களிலும், சோஃபியா டங்க்லி 22 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் டாமி பியூமண்ட் - அலிஸ் கேப்ஸி இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் பியூமண்ட் 20 ரன்களிலும், அலிஸ் கேப்ஸி 18 ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய ஏமி ஜோன்ஸ் 9 ரன்களுக்கும், சார்லி டீன் 4 ரன்னிலும் என ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.