ENGW vs INDW, Only test: ஷஃபாலி, ராணா அதிரடியில் டிராவில் முடிந்த ஆட்டம்!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்திய - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 16ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஹீத்தர் நைட், பியூமண்ட், டான்க்லி ஆகியோரது அபாரமான அரைசதம் மூலம் முதல் இன்னிங்ஸில் 396 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது.
Trending
இங்கிலாந்து அணியில் அதிகபட்சாமாக ஹீத்தர் நைட் 95 ரன்களை சேர்த்தா. இந்திய அணி தரப்பில் ஸ்நே ராணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியாக விளையாடி அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தது.
இதில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷஃபாலி வர்மா 96 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத் தொடர்ந்து ஸ்மிருதி மந்தனாவும் 78 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த வீராங்கனைகளும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றினர்.
இதனால் இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஃபாலோ ஆன் ஆனது.
அதன்பின் 165 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக மந்தனா 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஷஃபாலி வர்மாவுடன் ஜோடி சேர்ந்த தீப்தி சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்தினார். இதில் இவரும் அரைசதம் கடந்தனர்.
பின் 63 ரன்களில் ஷஃபாலி ஆட்டமிழக்க, தீப்தி சர்மா 54 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்ன வந்த பூனம் ராவத் 39, மிதாலி ராஜ் 4, ஹர்மன்பிரீத் கவுர் 8, பூஜா வஸ்டகர் 12 என அடுத்தடுத்து வெளியேறியாதல் இந்திய அணியின் தோல்வி உறுதியானதாக ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஆனால் 8ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்நே ராணா - தனியா பாட்டியா இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை முன்னிலைப் படுத்தினர்.
இதில் அபாரமாக விளையாடிய ஸ்நே ராணா அரைசதமடித்தார். இதன் மூலம் நான்காள் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்களை குவித்தது.
இந்திய அணி தரப்பில் ஸ்நே ராணா 80 ரன்களுடனும், தனியா பாட்டியா 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதனால் இந்திய - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி தரப்பில் அறிமுக வீராங்கனையாக களமிறங்கி இரு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்த ஷஃபாலி வர்மா இப்போட்டியின் ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
Win Big, Make Your Cricket Tales Now