Advertisement

இந்தியா - இங்கிலாந்து மகளிர் ஒருநாள் தொடர் இன்று முதல் ஆரம்பம்!

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 27, 2021 • 09:29 AM
ENGW vs INDW, Preview: Indian Women Eye Quick Start From Shafali Against England
ENGW vs INDW, Preview: Indian Women Eye Quick Start From Shafali Against England (Image Source: Google)
Advertisement

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்டோலில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி ‘டிரா’ செய்தது. 

இதில் இந்திய அணி சார்பில் அறிமுக வீராங்கனையாக களம் இறங்கிய ஷஃபாலி வர்மா இரு இன்னிங்சிலும் அரைசதம் (96 மற்றும் 63 ரன்) ஆட்டநாயகி விருதைப் பெற்றார்.

Trending


இந்நிலையில் இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 ஓருநாள் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றது.  இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டோலில் இன்று நடக்கிறது. 

இதில், டெஸ்ட் போட்டியை தொடர்ந்து சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலும் இந்திய அணி வீராங்கனை ஷஃபாலி வர்மா அறிமுக வீரராக களமிறங்குகிறார். 

இதற்கு முன்பு 22 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியுள்ள ஷஃபாலி வர்மாவை கடந்த மார்ச் மாதம் உள்ளூரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சேர்க்காதது விமர்சனத்திற்குள்ளானது. அந்த தொடரில் இந்தியா 1-4 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. 

அதிரடியால் கவர்ந்திழுக்கும் ஷஃபாலி ஒரு நாள் கிரிக்கெட்டிலும் பிரமிக்க வைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து தொடக்க வீராங்கனையாக விளையாடுவார். கேப்டன் மிதாலிராஜ், துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா ஆகியோரும் பேட்டிங்கில் கைகொடுத்தால் இந்திய அணியால் இங்கிலாந்துக்கு கடும் சவால் கொடுக்க முடியும்.

அதேசமயம் ஹீத்தர் நைட் தலைமையிலான உலக சாம்பியனான இங்கிலாந்து மகளிர் அணி உலகின் மிகவும் வலுவான கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டாமி பீயூமன்ட், நாட் ஸ்கைவர், எமிலி ஜோன்ஸ், அன்யா ஸ்ருப்சோல், சோபி எக்லெஸ்டோன், கேத்தரின் பிரண்ட் என திறமையான வீராங்கனைகள் நிறைய பேர் அந்த அணியில் உள்ளனர். அதுவும் உள்ளூர் சூழல் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 69 ஒரு நாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 30 போட்டிகளில் இந்தியாவும், 37 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் முடிவின்றி அமைந்துள்ளது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement