-mdl.jpg)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணியானது 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என்ற கனக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நடைபெற்று வ்ருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த நான்கு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றிபெற்று 4-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீராங்கனைகள் டேனியல் வையர் ரன்கள் ஏதுமின்றி முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மையா பௌச்சர் 13 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 16 ரன்கள் சேர்த்ததுடன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அலிஸ் கேப்ஸியும் 25 ரன்களுடன் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹீதர் நைட் ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திலும், மறுபக்கம் களமிறங்கிய ஏமி ஜோன்ஸ் 11 ரன்களுக்கும், சார்லி டீன் 24 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹீதர் நைட் 46 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.