Advertisement

ஐபிஎல் தொடரில் சதம் விளாசியது குறித்து மனம் திறந்த ஜெய்ஷ்வால்!

இந்தச் சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனால் இது ஒரு போட்டி மட்டும்தான். நான் தொடர்ந்து செல்ல விரும்புகிறேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் கூறியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan April 30, 2023 • 22:52 PM
"Enjoyed every part of my innings, it was amazing", RR's Yashasvi after maiden IPL hundred against M (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில்  இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டி ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் 1000- ஆவது போட்டியாகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் 21 வயதான மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் ஜெய்சுவால் 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 7 விக்கட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.

Trending


முன்னதாக 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா இரண்டு அணிகளும் மோதிக்கொண்ட முதல் போட்டியில் கொல்கத்தா அணியின் பிராண்டன் மெக்கலம் 158 ரன்கள் குவித்து அசத்தினார். இன்று 1000 ஆவது போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 124 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.

சதம் அடித்ததற்கு பிறகு பேசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், “எனது இன்னிங்ஸின் ஒவ்வொரு பகுதியையும் நான் ரசித்தேன் என்று நினைக்கிறேன். நான் சரியாக யோசித்து சரியாக திட்டமிட்டு எனது ஷாட்களை அடித்தேன். நான் விளையாட விரும்பும் அனைத்து ஷாட்களையும் பயிற்சி செய்துள்ளேன்.

நான் ஒவ்வொரு முறை பேட்டை பிடிக்கும் போதும் அது வலையிலோ இல்லை களத்திலோ ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஜூபின் ஸாருடன் நான் மிகவும் உழைத்திருக்கிறேன். இந்தச் சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனால் இது ஒரு போட்டி மட்டும்தான். நான் தொடர்ந்து செல்ல விரும்புகிறேன். பணியில் எனது பங்கை நான் அறிவேன். ரன் ரேட் அதிகமாக இருப்பதை உறுதி செய்து அணிக்கு முடிந்தவரை பங்களிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement