
டி20 உலகக் கோப்பை 2022 தொடரின் அரையிறுதி சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் 46, டேரில் மிட்செல் 53 ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தனர். டெவான் கான்வே 21, ஜேம்ஸ் நீஷம் 16 ஆகியோர் ஓரளவுக்கு மட்டும்தான் ரன்களை சேர்த்தார்கள். இதனால், நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 152/4 ரன்களைதான் எடுக்க முடிந்தது.
இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 57, பாபர் ஆசாம் 53, முகமது ஹேரிஸ் 30 ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார்கள். இதனால், பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 153/3 ரன்களை சேர்த்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.