
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் - தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று வதோதராவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 260 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷேன் வாட்சன் தலா 9 பவுண்டரி, 9 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 122 ரன்களையும், கல்லம் ஃபெர்குசன் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 85 ரன்களைச் சேர்த்தனர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணியில் ஹாஷிம் ஆம்லா 30 ரன்களையும், அல்விரோ பீட்டர்சென் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் ரன்கள் சேர்க்க தவறினர்.
இதனால் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணி 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி தரப்பில் பென் லாக்லின் 3 விக்கெட்டுகளையும், சேவியர் தோஹெர்டி, பிரைஸ் மெக்கெய்ன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.