Advertisement

இனி ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி தான் - பாட் கம்மின்ஸ்!

உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
இனி ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி தான் - பாட் கம்மின்ஸ்!
இனி ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி தான் - பாட் கம்மின்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 15, 2023 • 04:30 PM

ஐசிசியின் நடப்பு  ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு தொடக்கம் சிறப்பானதான அமையவில்லை. இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில்  தோல்வியுடன் தொடங்கியது ஆஸ்திரேலியா. அதன்பின் இரண்டாவது போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 15, 2023 • 04:30 PM

தொடர்ச்சியான இந்த இரண்டு தோல்விகளால் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது  இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இனிவரும் ஒவ்வொரு போட்டியும் இறுதிப்போட்டி போன்றது என அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

Trending

இதுகுறித்து பேசிய பாட் கம்மின்ஸ், “கடந்த 2019 ஆம் ஆண்டில் லீக் போட்டிகளில் இந்தியாவிடமும், தென்னாப்பிரிக்காவிடமும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. கடந்த ஆண்டும் எங்களுக்கு இந்த இரண்டு அணிகளே சவாலாக இருந்தது. நாங்கள் சிறிது காலம் விளையாடமல் இருந்த அணிகளுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அந்த அணிகளுக்கு எதிராக நிறைய வெற்றிகளைப் பெற்றுள்ளோம். அதனால், நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம். உலகக் கோப்பையில் எங்களது தொடக்கம் சிறப்பானதாக இல்லை. தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் அணியில் உள்ள அனைவரும் உறுதியாக இருக்கிறோம். இனிவரும் ஒவ்வொரு போட்டியும் கிட்டத்தட்ட இறுதிப்போட்டி போன்றது. நாங்கள் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாளை லக்னோவில் நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இலங்கை அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. ஏற்கெனெவே ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளை இழந்துள்ளதால், இப்போட்டியில் கட்டாயம் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement